ஆன்லைன் விற்பனைக்கு தடை: ஆப்பு வைத்தது நீதிமன்றம், புதிய விதிகள் உருவாக்கம்..!!

Default Image

ஆன்லைன் பட்டாசு விற்க இடைக்கால தடை விதித்தது  சென்னை உயர்நீதிமன்றம்.
பட்டாசு விற்பனையளர்கள் தொடர்ந்த வழக்கில் இடைக்கால தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.பட்டாசு வியாபாரி ஷேக் அப்துல்லா தொடர்ந்த வழக்கில் இடைக்கால தடை விதிப்பு.
சென்னையை சேர்ந்த பட்டாசு வியாபாரி ஷேக் அப்துல்லா சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர கால மனுவாக ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில் ஆன்லைனில் பட்டாசு விற்பதை தடை செய்யவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.குறிப்பாக இந்தக்காலத்தில் பலரும் ஆன்லைன் மூலமாக பல்வேறு இணையதளங்களில் விற்க கூடிய பட்டாசு விற்பனையை ஊக்குவிப்பதாகவும் , இதனால் பாதுகாப்பு குறித்த எந்த கட்டுப்படும் விதிக்கப்படவில்லை என்றும் இதனால் சிறு வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்த மனுவில் அவர் குற்றம்சாட்டி இருந்தார்..
இது மட்டும் இல்லாமல் சீனா போன்ற நாடுகளில் அனுமதி மறுக்கப்பட்ட படடாசுக்கள் இங்கு ஆன்லைன் மூலமாக விற்பனை செய்யப்படுவதாகவும், இதுவகை பட்டாசுக்கள்  தமிழக்தில் தடை செய்யப்பட்டு இருந்த போதும் தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் ஆன்லைன் மூலம் விற்கப்படுகிறது என்ற குற்றசாட்டுக்களையும் இந்த அந்த மனு வாயிலாக அவர் தெரிவித்தார்.
இந்த வகை ஆன்லைன் மூலம் விற்கப்படுகிற பட்டாசுகளை  கட்டுப்படுத்த வேண்டும் என்று வெடி பொருள் கண்காணிப்பு துறையிடம் மனு அளித்த போது ஆன்லைன் மூலம் விற்கப்படுகிற பட்டாசுகளுக்கு முறையான விதிகள் வகுக்கப்படமால் இருப்பதாக வெடி பொருள் கண்காணிப்பு துறை பதில் மனு அளிக்கப்பட்ட நிலையில் இவர்  இந்த வழக்கை உயர்நீதிமன்றத்தில் தொடுத்துள்ளார் .
இந்த வழக்கானது இன்று நீதிபதிகள் முன்பாக விசாரணைக்கு வந்தது அப்போது நீதிபதிகள் ஆபத்தான விஷயங்கள் ஒன்லைன் விற்பனை மூலம் வருவதை கட்டுப்படுத்த ஏன் விதிகளை உருவாக்கப்படவில்லை என்று  கேள்விகள் எழுப்பி இது தொடர்பாக வெடிபொருள் கண்காணிப்பு துறை பதிலளிக்க வேண்டும் என்றும் அதுவரை  ஆன்லைனில் பட்டாசு விற்பனை விற்பனையை செய்ய தடை விதிப்பதாகவும்  உத்தரவிட்டு இந்த வழக்கில் வெடி பொருள் கண்காணிப்பு துறை நவம்பர் 15ஆம் தேதி பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சிறுவியாபாரிகளுக்கு  பட்டாசு கடை வைக்கும் பொது அதற்கான உரிமத்தை , மற்றும் கட்டுப்பாடுகள் தந்த பகுதியில் உள்ள அரசு நிர்வாகத்துறை வகுக்கின்றது.அதற்கான  பாதுகாப்பும் , கட்டுப்படும் விதிக்கப்பட்டுள்ளது.ஆனால்  ஆன்லைன் விற்பனைக்கு மட்டும் எந்த காட்டுப்பூப்படும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்