ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை…உயர்நீதிமன்றம் அதிரடி…!!
ஆன்லைனில் மருத்து விற்பனை செய்ய சென்னை உயர்நீதி மன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் தொடர்ந்த சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது ,அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.அதில் மருந்து விற்பனை செய்யவேண்டுமென்றால் மருத்துவரின் அறிவுரையுடன் , மருத்துவரின் பரிந்துரையும் வேண்டும்.ஆனால் இன்று ஆன்லைனில் மருத்துவரின் உரிய அனுமதி பெறமல் , மருத்துவர் அனுமதியின்றி மருந்துகளை விற்பனை செய்து வருகின்றனர்.
இதனால் தரமற்ற மருந்துக்களை , போலியான மருந்துக்களும் விற்பனைக்கு வருகிறது.இதனால் பொதுமக்களின் , நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து நேரும் அபாயம் ஏற்படுகிறது என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.இந்த மனுவின் விசாரணை அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் ஆன்லைன் மருந்து விற்பனைக்கு 2 வாரம் இடைக்கால தடை வித்தித்து வழக்கை ஒத்திவைத்தது.
dinasuvadu.com