ஆன்லைனில் உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்கு பதிவு செய்து காத்திருப்போருக்கு முன்னுரிமை!சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையில் ஆன்லைனில் பதிவு செய்து காத்திருப்போருக்கு, வெளிப்படைத் தன்மையுடன் முன்னுரிமை அளிக்கப்படுவதாக, தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரின்ஸ், உடல் உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்காக, இந்தியர்கள் 5 ஆயிரத்து 310 பேரும், வெளிநாட்டினர் 53 பேரும் காத்திருப்பதாக கூறினார். இந்த நிலையில், வெளிநாட்டினர் 10 பேருக்கு இதய மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறிய எம்.எல்.ஏ. பிரின்ஸ், இதில் வெளிநாட்டினருக்குத் தான் முன்னுரிமையா என்றும் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையில் முறைகேடு என வெளியான செய்தி மனவேதனையைத் தருவதாகவும், மருத்துவர்களின் மனதை புண்படுத்துவதாகவும் இருப்பதாக தெரிவித்தார். மேலும், ஆன்லைனில் பதிவு செய்து காத்திருப்போருக்கு, விதிமுறைகளுக்கு உட்பட்டு, முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.