சேலம் நெய்க்காரப்பட்டியில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள அடையார் ஆனந்தபவன் உணவகத்தின் மேற்கூரை சரிந்து விழுந்த விபத்தில், வாடிக்கையாளர் உள்பட இருவர் உயிரிழந்தனர்.
சேலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதன் காரணமாக சேலம் – கோவை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள அடையார் ஆனந்தபவன் உணவகத்தின் ஆஸ்பெடாஸ் மேற்கூரை சரிந்து விழுந்தது. அப்போது உணவகத்தில் இருந்த ஊழியர்கள் உள்பட அனைவரும் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்து வெளியேறினர். இடிபாடுகளுக்குள் ஏராளமானோர் சிக்கி இருக்கக் கூடும் என்ற அச்சம் நிலவியதால் தீயணைப்புத் துறையினரும் போலீசாரும் அங்கு உடனடியாக விரைந்து சென்றனர்.
ஜே.சி.பி. உதவியுடன் மீட்புப் பணி நடைபெற்றது. இடிபாடுகளுக்குள் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்த இருவரது உடலை போலீசார் மீட்டனர். விசாரணையில் ஒருவர் ஈரோட்டைச் சேர்ந்த நூருல் அமீன் என்பதும், உணவகத்தில் உணவருந்திக் கொண்டிருந்தவர் என்பதும் தெரிய வந்தது. மற்றொருவர் உணவகத்தில் பணிபுரிந்த பீகாரைச் சேர்ந்த அர்ஜூன் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…