ஆதாரம் இல்லாததால் வழக்கு விடுவிப்பு-சிபிஐ..!நெஞ்சை பதறவைத்த பொள்ளாச்சி பாலியல்…விவகாரத்தில் திருப்பம்..!
- அனைவரின் நெஞ்சை பிழிவத்த கொடூர சம்பவமான பொள்ளாச்சி பாலியல் வழக்கு
- பெண்ணின் சகோதரர் தாக்கப்பட்ட வழக்கில் திருப்பம்-வழக்கு விடுக்கபட்டது.
தமிழகத்தையே அதிர்ச்சியாகி சம்பவம் பொள்ளாச்சி பாலியல் வழக்கு ஒவ்வொரு பெற்றோர் கண்ணிலும் இரத்த கண்ணீரை வழிவைத்த இந்த சம்பவத்தின் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் தொடர்ந்த வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
பாலியல் வழக்கில் கைதாகியவர்களால் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்திருந்தார்.அந்த புகாரில் பேரில் அவரை தாக்கியதாக மணிவண்ணன் என்பவன் உள்ளிட்ட 4 பேர் கைதாகினர்.
இதன் பின் கைதான மணிவண்ணன் பாலியல் வழக்கிலும் சேர்க்கப்பட்ட நிலையில் மற்ற மூவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். பெண்ணின் சகோதர் தாக்கப்பட்ட வழக்கையும் பாலியல் வழக்கையும் சிபிஐ ஒன்றாக விசாரித்து வந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரை தாக்கியதாக தொடரப்பட்ட இந்த வழக்கில் போதிய ஆதாரம் இல்லை என்று வழக்கு கைவிடுவதாக கோவை நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்பப்பட்டது.
அதில் இவ்வழக்கு தொடர்பாக போதிய ஆதாரம் இல்லாத காரணத்தால் இந்த வழக்கின் மேல் நடவடிக்கைகளை கைவிடுவதாக தனது அறிக்கையில் சிபிஐ தெரிவித்தது உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இது குறித்து சிபிஐ தரப்பில் கூறுகையில் இவ்வழக்கு ஆதாரம் இல்லாததால் கைவிடப்படுகிறது.ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் பாலியல் வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
வழக்கு கைவிடப்படுவது தொடர்பாக வாசகராகிய உங்களுடைய நீதி பதில்கள் என்ன..?