ஆடிட்டர் குருமூர்த்தி -ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு !
நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில், துக்ளக் இதழின் ஆசிரியரான ஆடிட்டர் குருமூர்த்தி, சந்தித்து ஆலோசனை நடத்தினார். அரசியலுக்கு வருவது உறுதி என அறிவித்த ரஜினிகாந்த், இதற்கான பணிகளை தீவிரப்படுத்தினார்.
இணையதளம் வாயிலாக உறுப்பினர் சேர்க்கையும் நடத்தப்பட்டது. மாவட்ட வாரியாக நிர்வாகிகள் நியமனம் நடைபெற்றது. இந்த நிலையில் வழக்கமான உடல் பரிசோதனைக்காக ரஜினிகாந்த் இன்று அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார். அங்கு 10 நாட்கள் தங்கி இருந்து அவர் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ளவுள்ளார்.
இந்தச் சூழலில் சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்துக்கு ஆடிட்டர் குருமூர்த்தி சென்றார். அங்கு இருவரும் அரசியல் சூழல் குறித்து ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.