ஆடல் , பாடல் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு …சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி…!!
தமிழக கோவில்களில் கலைநிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கோரிய வழக்கில் ஆபாச நடனம் , பாடல் காட்சி இடம்பெற்று நடத்தினால் நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் கலைநிகழ்ச்சிகள் நடத்தக்கோரிய வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.வழக்குகளை விசாரித்த நீதிபதி கோவில் திருவிழாக்கள் அல்ல விழா நிகழ்ச்சிகளில் கலாசாரம் என்ற பெயரில் நடக்கும் நிகழ்ச்சிகளில் ஆபாச நடனம் , பாடல்கள் இடம்பெற்றால் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற தமிழக DGP அலுவலகத்திற்க்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும் அந்த உத்தரவில் கோவில்களில் அல்ல கலாச்சார விழாக்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளை காவல்துறை முழு வீடியோ பதிவு எடுக்க வேண்டும் , ஆபாசமாக பாடல்கள் , நடனம் இடம்பெற்றால் உடனே நடவடிக்கை எடுக்க அனைத்து காவல்நிலையத்துக்கும் சுற்றறிக்கையை அனுப்ப வேண்டுமென உத்தரவிட்டு , இந்த வழக்கை நவம்பர் 2ஆம் தேதி-க்கு வழக்கை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்..
dinasuvadu.com