ஆசிரியர்களை வெயிட்டேஜ் மதிப்பெண் இன்றி நியமிக்க பரிசீலனை!பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ,வெயிட்டேஜ் மதிப்பெண் இல்லாமல், அரசுப் பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமனம் செய்வது, பரிசீலனையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் தகுதி தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்குவதன் அவசியம் குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை திமுக கொண்டுவந்தது. அப்போது பேசிய திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு, ஆசிரியர் தகுதி தேர்வில் உள்ள வெயிட்டேஜ் முறையை நீக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், வெயிட்டேஜ் மதிப்பெண் இல்லாமல், ஆசிரியர்களை நியமனம் செய்ய அரசு பரிசீலனை செய்து வருவதாகவும், விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.