சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அரசு சார்பில் 10 ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசு வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூரில், அரசு உதவி பெரும் மேல்நிலை பள்ளி விழாவில் கலந்து கொண்ட பள்ளிக் கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்களின் வளர்ச்சிக்காக, 1 கோடியே 20 லட்ச ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட கலையரங்கை திறந்து வைத்து பேசினார்.
அப்போது, தமிழகத்தில் உள்ள மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, எதிர்வரும் ஜனவரி மாதம் மூன்றாவது வாரத்திற்குள், ஆங்கில மொழியை கற்கும் வகையில், எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகள் திறக்கப் பட உள்ளதாக தெரிவித்தார்.
ஆசிரியர்களுக்கு தமிழக அரசு சார்பில் நல்லாசிரியர் விருதும், மத்திய அரசு சார்பில் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டு வருவதாக கூறினார். விடுப்பு இல்லாமல் பணியாற்றும் ஆசிரியரை ஊக்கப்படுத்த, பத்தாயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் நற்சான்றிதழும் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.
சென்னை : வங்க கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி கடற்கரையில் கரையை கடக்கவுள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,…
சென்னை : வங்க கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி கடற்கரையில் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம்…
சென்னை : பெஞ்சல் (FENGAL) புயல் 30.11.2024 அன்று கரையை கடக்கும் போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம்,…
சென்னை : வங்க கடலில் உருவான ஃபெஞ்சல் புயலின் நகரும் வேகம் 13 கிலோ மீட்டரில் இருந்து 15 ஆக…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயலின் நகரும் வேகம் 13 கிலோ மீட்டரில் இருந்து 15 ஆக அதிகரித்துள்ளதாக…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் நவம்பர் 30-ம் தேதி பிற்பகலில் மணிக்கு 70-80 கி.மீ வேகத்தில் மணிக்கு 90…