ஆசிரியர்களின் வருகைப்பதிவிற்கு அரசு பள்ளிகளில் பயோமெட்ரிக்! அமைச்சர் செங்கோட்டையன்

Default Image

அமைச்சர் செங்கோட்டையன்,அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் வருகைப்பதிவிற்கு பயோமெட்ரிக் முறை, 9 கோடி ரூபாய் செலவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று  அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் முடிவுற்று, அதன்மீதான பதிலுரையின்போது, அத்துறையின் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் 27 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் வருகைப்பதிவு பதிவு செய்ய, 9 கோடி ரூபாய் செலவில், பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை நடைமுறைப்படுத்தப்படும் என செங்கோட்டையன் தெரிவித்தார்.

கல்வித்தரத்தை மேம்படுத்த பிற மாநிலங்களில் பின்பற்றப்படும் சிறந்த செயல்பாடுகளை நடைமுறைப்படுத்த அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் வளங்கள் பயன்படுத்தப்படும் என்று செங்கோட்டையன் கூறினார்.

இளம்பருவத்திலேயே வாசித்தலை நேசிக்கும் விதமாக, 6 கோடியே 23 லட்ச ரூபாய் செலவில், அரசு பள்ளிகளில், நூலகங்கள் அமைக்கப்படும் என்றார். பள்ளி மாணவர்கள் பயன்பெறும் பொருட்டு, பல்வேறு பாடப்பிரிவுகளை சார்ந்த 5 ஆயிரம் காணொளிகாட்சிகள் தொகுக்கப்பட்டு அரசு கேபிள் தொலைத்தொடர்பு மூலம் ஒளிபரப்படும் என்றும் அறிவித்தார். வரும் கல்வி ஆண்டிலிருந்து, அனைத்து பள்ளிகளிலும், ஒவ்வொரு மாதமும் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் முறையாக நடத்தப்படும் என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்.

பல்கலை ஆய்வகங்கள், பேராசிரியர்களின் வழிகாட்டலை பெறும் வகையில், உயர்கல்வி நிறுவனங்களோடு, அரசு பள்ளிகள் இணைக்கப்படும் என்றார். சென்னை எழும்பூரில் உள்ள, 122 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த கன்னிமாரா பொதுநூலகம், ஒன்றரை கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

முதற்கட்டமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கோயம்புத்தூரில் உள்ள நூலங்களில் வை-பை வசதி ஏற்படுத்தப்படும் என்றார். தொடர்ந்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், இந்தியாவிலேயே, தமிழ்நாட்டில் தான், CBSE பாடத்திட்டத்தை விஞ்சும் வகையில், QR Code வசதிகளுடன் பாடப்புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார். மொழிப்பாடங்கள், முதல்தாள், இரண்டாம் தாள் என்று உள்ள நடைமுறையை மாற்றி, ஒரே தாளாக தேர்வை நடத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், செங்கோட்டையன் தெரிவித்தார். நீட் தேர்வு தேவையில்லை என்பது தான் அரசின் கொள்கை என்றும் செங்கோட்டையன் விளக்கமளித்தார்.

தமிழ்நாட்டில் உள்ள 68 கல்வி மாவட்டங்கள், 120 கல்வி மாவட்டங்களாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். புதிய பாடத்திட்டத்தை மாணவர்களுக்கு எளிய முறையில் பயிற்றுவிக்கும் வகையில், 74 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, வெளிநாட்டு ஆசிரியர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும் என்றும்  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்