ஆகஸ்ட் இறுதிக்குள் ஏரி, குளங்களில் காவிரி நீர் நிரப்பப்படும் : அமைச்சர் தகவல் …!!!
ஆகஸ்ட் இறுதிக்குள் ஏரி, குளங்களில் தண்ணீர் முழுமையாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் தெரிவித்தார்.
மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் உபரி நீரானது காவிரி, கொள்ளிடத்தில் திறக்கப்பட்டு வருகிறது. மேலும், திருச்சி மாவட்டத்தில் உள்ள பாசன வாய்க்கால்களை திறக்கப்பட்டு ஏரி, குளங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜன் செய்தியாளர்களிடம் கூறியது:
மாவட்டத்தில் உள்ள 76 ஏரி, குளங்களுக்கு முழுமையாக தண்ணீர் கொண்டு செல்லும் பணியில் பொதுப்பணித்துறையினர் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதில் 2 குளங்கள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதில், 4 குளங்களில் 75 சதவீதுக்கு மேலும், 40 குளங்களில் 50 சதவீதுக்கு மேல் தண்ணீர் செல்கிறது. கடைமடை பகுதிகளுக்கும் தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வரவில்லை என்ற புகார்களுக்கு இடமில்லாத வகையில் தண்ணீர் கொண்டு செல்லப்படும். இவ்வாறு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறினார். ஆய்வின்போது, பொதுப்பணித்துறை ஆற்றுப்பாதுகாப்பு கோட்ட செயற்பொறியாளர் கணேசன், உதவிக்கு கோட்ட பொறியாளர்கள் சிவகுமார், கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.