அ.தி.மு.கவின் கொடி, பேனர்களை கிழித்து ரகளை…. பசும்பொன்னில் பரபரப்பு…!!
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் டி.டி.வி.தினகரன் முன்னிலையிலேயே அவரது தொண்டர்கள் அ.தி.மு.கவின் கொடி, பேனர்களை கிழித்து ரகளையில் ஈடுபட்டனர்.
பசும்பொன்னில் முத்துராமலிங் தேவர் குருபூஜையை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்த டி.டி.வி. தினகரன் வருகை தந்தார். அவருடன் அமமுக தொண்டர்களும் நூற்றுக்கணக்கில் ஊர்வலமாக சென்றனர். அப்போது தேவர் நினைவிடம் அருகே அ.தி.மு.க சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை அ.ம.மு.கவினர் கிழித்து ரகளையில் ஈடுபட்டனர். தினகரன் முன்னிலையிலேயே பெரிய கம்புகளை கொண்டு அ.தி.மு.க பேனர்கள் மற்றும் கொடிகளை அ.ம.மு.கவினர் சேதப்படுத்தினர்.
ஒரு கட்டத்தில் அ.தி.மு.க கொடிகள் மற்றும் பேரிகார்டுகளையும் தள்ளிவிட்ட அவர்கள் போலீசாருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர்.இதனை தொடர்ந்து கயிறுகட்டி டி.டி.வி ஆதரவாளர்களை தடுத்து போலீசார் திருப்பி அனுப்பிவைத்தனர்.
dinasuvadu.com