முடிஞ்ச தொட்டுப்பாரு….திமிலை காட்டி வீரர்களை தெறிக்கவிட்ட ராவணன்.. அசத்தல் -வீடியோ உள்ளே

Default Image
  • அவனியாபுரத்தில் சிறந்த காளையாக தேர்வான புதுக்கோட்டை  ராவணன் காளை
  • அலங்காநல்லூரிலும் வீரர்களை மிரட்டி தெரிக்க வைத்தது.

 

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி 8 மணிக்கு பதில் காலை 7 மணிக்கே தொடங்குகிறது .ஜல்லிக்கட்டில்  700 காளைகள் 926  மாடுபிடி வீரர்கள் பங்கேற்கும் அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி காலை 8 மணிக்கு தொடங்கியது.

உறுதிமொழியை ஆட்சியர் வாசிக்க மாடுபிடி வீர்கள் உறுமொழி ஏற்புடன் ஜல்லிக்கட்டு தொடங்கியது.அமைச்சர் ஆர்பி உதயகுமார், ஆட்சியர் வினய் மற்றும் கண்கானிப்பு குழுவின் ஓய்வுபெற்ற நீதிபதி மாணிக்கம் ஆகியோர் இந்த போட்டியை துவக்கி வைத்தது குறிப்பிடத்தக்கது. முதலில் கோவில் காளைகள் விழ்த்துவிடப்பட்டன.

Image

அதனைத் தொடர்ந்து மற்ற காளைகள் அவிழ்த்துவிடப்பட்டு வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்தது காளைகள் அதனை அடக்க வீரர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.காளைகளும் காளையர்களும் சரி நிகராக விளையாடி வரும் இந்த களத்தில் யாருக்கும் அஞ்சாமல்  திமிலை காட்டி தொட்டுப்பாரு என்று திமிராக ஒரு காளை வீரர்களுக்கு சவால் விடும் வகையில் மிரட்டியது.இதே காளை தான் அவனியாபுர ஜல்லிக்கட்டிலும் மிரட்டியது.

இன்றைய போட்டியில் இக்காளையை யாராலும் தொடக் கூட முடியவில்லை. நீண்ட நேரம் மைதானத்தில் நின்று விளையாடி ஆட்டம் காட்டி அனைவரையும் கவர்ந்தது.இதே போல் தான் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 9 நிமிடம் களத்தில் விளையாடி யாராலும் பிடிக்க முடியாததால் சிறந்த காளையாக பரிசு பெற்றது.இந்நிலையில் அவனியாபுரத்தை தொடர்ந்து, அலங்காநல்லூரிலும்  களத்தில் நின்று ஆடி, வீரர்களை மிரள வைத்தது.யார் காளை இந்தக் காளை என்று பார்த்தால் அது புதுக்கோட்டை சேர்ந்த  காவல் ஆய்வாளர் அனுராதாவின் காளை ராவணன் என்று தெரியவந்தது.பெயருக்கு ஏற்றாற்போல் களத்தில் ஒரு வீரரையும் நெருங்க விடாமலும் நெருங்கிய வீரர்களை தூக்கி எரிந்தும் ஆட்டம் காட்டியது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் ராவணனின் ஆட்டத்தை பலரும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்து வகின்றனர்.அந்த வீடியோ..இதோ

https://twitter.com/madhavpramod1/status/1218066991052779520

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்