அலங்காநல்லூர் ஜல்ல்லிகட்டு திருவிழா : இன்று கால்கோள் நடும் விழா
ஜல்லிக்கட்டு விளையாட்டுவிழா இந்த ஆண்டும் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு திருவிழா வருகிற ஜனவரி 16ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதனை காண தமிழகம் முழுவதிலிருந்து லட்சகணக்கான மக்கள் வருவார்கள். இந்த ஜல்லிக்கட்டு போட்டியின் முதற்கட்ட வேலையாக இன்று கால்கோள் நடும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் விழாக்குழு மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமை வகித்தார்.
source : dinasuvadu.com