அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில்…மாடு முட்டியதில் மாட்டின் உரிமையாளார் உயிரிழப்பு
- ஆரவாரத்துடன் நடைபெற்று வரும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.
- மாடு முட்டியதில் மாட்டின் உரிமையாளார் ஸ்ரீதர் என்பவர் உயிரிழந்தார்.
உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி 8 மணிக்கு பதில் காலை 7 மணிக்கே தொடங்குகிறது .ஜல்லிக்கட்டில் 700 காளைகள் 926 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கும் அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி காலை 8 மணிக்கு தொடங்கியது.
உறுதிமொழியை ஆட்சியர் வாசிக்க மாடுபிடி வீர்கள் உறுமொழி ஏற்புடன் ஜல்லிக்கட்டு தொடங்கியது.அமைச்சர் ஆர்பி உதயகுமார், ஆட்சியர் வினய் மற்றும் கண்கானிப்பு குழுவின் ஓய்வுபெற்ற நீதிபதி மாணிக்கம் ஆகியோர் இந்த போட்டியை துவக்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.
முதலில் கோவில் காளைகள் விழ்த்துவிடப்பட்டன.அதன்பின்னர் சீறிப்பாய்ந்த காளைகள் முடிந்தால் தொட்டுப் பாரு என்று வீரர்களை மிரட்டியும்,அதனை வீரர்கள் அடக்கியும் வருகின்றனர்.இவ்வாறு களைகட்டிய ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அலங்கநல்லூரில் மிரட்டி வரும் காளைகளில் ஒரு காளை முட்டியதால் மாட்டின் உரிமையாளர் ஸ்ரீதரன் என்பவர் உயிரிழந்தார். இவர் மதுரை அருகே உள்ள சோழவந்தான் என்ற கிராமத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.