உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி 8 மணிக்கு பதில் காலை 7 மணிக்கே தொடங்குகிறது .ஜல்லிக்கட்டில் 700 காளைகள் 926 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கும் அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி காலை 8 மணிக்கு தொடங்கியது.றுதிமொழியை ஆட்சியர் வாசிக்க மாடுபிடி வீர்கள் உறுமொழி ஏற்புடன் ஜல்லிக்கட்டு தொடங்கியது.அமைச்சர் ஆர்பி உதயகுமார், ஆட்சியர் வினய் மற்றும் கண்கானிப்பு குழுவின் ஓய்வுபெற்ற நீதிபதி மாணிக்கம் ஆகியோர் இந்த போட்டியை துவக்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.
முதலில் கோவில் காளைகள் விழ்த்துவிடப்பட்டன.அதனைத் தொடர்ந்து மற்ற காளைகள் அவிழ்த்துவிடப்பட்டு வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்தது காளைகள் அதனை அடக்க வீரர்கள் ஆர்வம் காட்டி பிடித்தனர்.காளைகளும் காளையர்களும் சரி நிகராக விளையாடி வருந்த நிலையில் 35 பேர் காயமடையந்தனர்.இருவர் மாடு முட்டியதால் உயிரிழந்துள்ளனர்.
மாலை 4 மணிக்கு முடிய வேண்டிய ஜல்லிக்கட்டு 5 மணிவரை நீட்டிக்கப்பட்டது அவ்வாறு நீட்டிக்கட்டு விறுவிறுப்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வந்த நிலையில் தற்போது நிறைவடைந்து உள்ளது.இந்த போட்டியில் மொத்தம் பதிவு செய்யப்பட்டவர்களில் 660 காளைகள் மற்றும் 695 மாடுபிடி வீரர்கள் மட்டுமே தற்போது வரை வாய்ப்பு அளிக்கப்பட்டு பங்கேற்று விளையாடி உள்ளனர்.
இந்நிலையில் உலகப்புகழ்பெற்ற அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றிப்பெறும் சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் காளைகளுக்கு கார் சிறப்பு பரிசு வழங்கப்பட்டும் என்று தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது அதன்படி 19 காளைகளை அடக்கிய அலங்காநல்லூரை சேர்ந்த ரஞ்சித் குமாருக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது அடுத்ததாக 14 காளைகளை தழுவிய கார்த்திக் 2வது பரிசையும், 13 காளைகளை தழுவிய கணேசன் 3வது பரிசை வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல் வீரர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்த சிறந்த பிடிபடாத மாடுகளாகமதுரை குலமங்கலம் மார்நாடு காளை 12 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்து அசத்தியது.
அதே போல் அனைவரின் கவனத்தை பெற்ற புதுக்கோட்டை ஆய்வாளர் அனுராதாவின் ராவணன் காளை 10 மதிப்பெண் பெற்று இரண்டாவது இடத்தையும் , மதுரை ஜி.ஆர் கார்த்திக் காளை 9.60 மதிப்பெண் பெற்று 3ம் இடம் பிடித்து அசத்தி உள்ளது.வெற்றிப் பெற்ற காளைகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா : பிஃபா (FIFA) தலைவர் ஜியானி இன்ஃபன்டினோ, கிறிஸ்டியானோ ரொனால்டோ அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் ஃபிஃபா கிளப் உலகக் கோப்பை…
டெல்லி : ஆண்டுதோறும் நாட்டின் நிதி நிர்வாகம், வளர்ச்சி திட்ட இலக்குகள் குறித்து ஆலோசிக்க நிதி ஆயோக் கூட்டம் என்பது நடைபெற்று…
சென்னை : மத்திய மகாராஷ்டிராவில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது. அடுத்த 24…
டெல்லி : இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்தியாவின் புதிய டெஸ்ட் கேப்டனாக ஷுப்மான் கில் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த சுற்றுப்பயணத்திற்கான துணை…
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் 51-வது படமான ''Ace'' திரைப்படம் நேற்று (மே 23) அன்று திரையரங்குகளில் வெளியானது.…
டெல்லி : வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தலைப்பில் பிரதமர் மோதி தலைமையில், நிதி ஆயோக்கின் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. டெல்லியில்…