ஜாக்டோ ஜியோ அமைப்பானது தனது 7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகிறது.இவர்களின் போராட்டத்தை நிறுத்த வேண்டும் என்று நீதிமன்றம் வலியுறுத்தவே அதனை ஏற்று போராட்டம் கைவிடப்பட்ட நிலையில் மீண்டும் போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஜாக்டோ ஜியோ தற்போது செய்தியாளர் சந்திப்பின் போது தங்கது போராட்டம் குறித்து பேசியது அதில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் போராட்டமானது. ஜனவரி 7-ம் தேதி வரை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அந்த அமைப்பின் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
மேலும் நீதிமன்ற நடவடிக்கை நியாயமானதாக உள்ளது என்றும் அதனால் ஜன.7-ம் தேதி இது குறித்த அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றிய முடிவு அறிவிக்கப்படும் என்று ஜாக்டோ ஜியோ தெரிவித்துள்ளது.
உயர்நீதிமன்ற மதுரை கிளை ஜாக்டோ ஜியோவின் ஊதிய முரண்பாடுகளை நீக்குவதற்காக அமைக்கப்பட்ட சித்திக் கமிட்டி தனது அறிக்கையை சமர்பிக்க கூறிய போது அதற்கு கால அவகாசம் கேட்கவே கால அவகாசத்தை நீதிபதிகள் நீட்டித்து அந்த குழுவிடம் ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் 21 மாத நிலுவைத் தொகைக்கான விண்ணப்பங்களையும் வழங்குமாறு கூறிய நீதிபதிகள் ஜாக்டோ ஜியோவின் பரிந்துரைகளை இந்தக் கமிட்டி நன்கு ஆராய்ந்து, அதனை தமிழக அரசுக்கு பரிந்துரை அளிக்க வேண்டும்.மேலும் இதன்மீது கமிட்டி எடுத்த நடவடிக்கைகளை அரசு வருகின்ற ஜனவரி 7ஆம் தேதிக்குள் ஒரு அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
மாஸ்கோ : ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் நீடித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில், உக்ரைன் அதிபர்…
வயநாடு : கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைதேர்தல் கடந்த நவம்பர் 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில்…
சென்னை : நடைபெற்ற மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
மும்பை : இன்று மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது என்றாலும், பலரது கண்களும்…
டெல்லி : இந்தியாவின் முக்கிய மாநிலமான மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு யார் ஆள போகிறார்கள்…