அறிவிப்பில்லா மின்வெட்டை கண்டுபிடித்தவர்களே திமுகவினர்தான்…!அமைச்சர் தங்கமணி
தமிழகத்தில் தற்போது சீராக மின்விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அறிவிக்கப்படாத மின் வெட்டு நிலவி வருவதாக திமுக உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகள் அதிமுக அரசு மீது கடுமையாக விமர்சனம் செய்து வந்தது.இதற்கு அதிமுகவின் அமைச்சர்களும் அவ்வப்போது பதில் அளித்து வருகின்றனர்.இந்நிலையயில் தற்போது மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,தமிழகத்தில் தற்போது சீராக மின்விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.மேலும் அறிவிப்பில்லா மின்வெட்டை கண்டுபிடித்தவர்களே திமுகவினர்தான் என்றும் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.