அறநிலையத்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தர்ணா போராட்டம் தஞ்சாவூர் பனகல் கட்டடம் அருகே நடைபெற்றது. போராட்டத்தில், “அறநிலையத்துறை மீது களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு இந்து அமைப்புகள், திருக்கோயில் நிர்வாகத்தை விட்டு அறநிலையத்துறை வெளியேற வேண்டும். திருக்கோயில்களை ஆன்மீகவாதிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்கின்றனர். இவர்கள் எந்த ஆன்மீகவாதியிடம் இதனை ஒப்படைக்கப் போகிறார்கள் எனக்கண்டனம் எழுப்பப்பட்டது. திருக்கோயில் சொத்துக்களை மீட்டெடுத்து அதனை கோயில் சொத்தாக பொதுவாக்கி பாதுகாக்கப்பட்டுள்ளது.
கோவில்களில் காலிப் பணியிடங்கள்;
தனி நபர்களால் ஆக்கிரமிக்கப் பட்ட 5,559 ஏக்கர் நிலங்கள் தமிழகம் முழுவதும் மீட்கப்பட்டுள்ளது. அறநிலையத்துறையி்ன் கீழ் 38,600 திருக்கோயில்கள் உள்ளன. இதில் தேவையான அளவு பணியாளர்கள் இல்லை. 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்களில் இரவுக் காவலர்கள் இல்லை. இதனால் காலிப்பணியிடங்கள் அதிகமாக உள்ளது. ஒரு செயல் அலுவலரின் பொறுப்பில் 25 கோயில்கள் உள்ளன. இதனால் கூடுதல் பணியினால் அலுவலர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எவ்வித பணிப் பாதுகாப்பும் இல்லை.
சில கோயில்களில் திருட்டு மற்றும் அசம்பாவிதம் நடைபெற்றதால் அறநிலையத்துறை இணை ஆணையர் முதல் கோயில் பணியாளர்கள் வரை விசாரணை நிலையிலேயே கைது செய்வதும், விசாரணை முடிவு தெரிவதற்கு முன்பே ஒட்டு மொத்தமாக அறநிலையத்துறையை களங்கப்படுத்த முயற்சிப்பதும், இதைக்காரணமாகக் கொண்டு கோவில் களை இந்து அமைப்பினர் கைப்பற்ற முயற்சிப்பதும் நடக்கிறது எனவும் போராட்டத்தில் பேசியவர்கள் குறிப்பிட்டனர். போராட்டத்துக்கு, அறநிலையத்துறை ஓய்வுபெற்றோர் சங்க மாநில நிர்வாகி டி.கோவிந்தராஜ் தலைமை வகித்தார். திருக்கோவில் தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளர் கண்ணன், தணிக்கையாளர் சங்க நிர்வாகி பாலச்சந்தன், அலுவலர் சங்க மாநில துணைத் தலைவர் இரா.சந்திரசேகரன், முதுநிலை திருக் கோயில் பணியாளர் சங்க மாநிலத்துணைத் தலைவர் சா.சங்கர், திருக் கோயில் நிர்வாக அதிகாரிகள் சங்க முன்னாள் மாநிலப் பொருளாளர் மணவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…