அரசே நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் மருத்துவப் படிப்பு கட்டணத்பாமக நிறுவனர் ராமதாஸ்தை நிர்ணயிக்க வேண்டும்!

Default Image

பாமக நிறுவனர் ராமதாஸ்,நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் மருத்துவப் படிப்பு கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும் என  வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் சராசரிக் கல்விக்கட்டணம் ஆண்டுக்கு 7 லட்சம் ரூபாய் என்ற அளவில் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப் படிப்புக்கான ஆண்டுக் கல்விக்கட்டணம் அதிகபட்சமாக 22 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாகவும் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

நீட் தேர்வுக்குப் பிறகு மாணவர் சேர்க்கையை மத்திய சுகாதார அமைச்சகம் கையில் எடுத்துக் கொண்டதால் நன்கொடை வசூலிப்பதை நிறுத்திவிட்ட நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், அதை ஈடு செய்ய கல்விக்கட்டணத்தை 4 மடங்கு உயர்த்தியதை மத்திய அரசோ, இந்திய மருத்துவக் கவுன்சிலோ கேட்கவில்லை எனவும் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

எனவே, தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் மருத்துவக் கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்