மலைப் பாதையில் உதகையில் இருந்து பெங்களூர் சென்ற அரசுப் பேருந்து, பாறையில் மோதி விபத்துக்குள்ளானதில் பயணிகள் உயிர்தப்பினர்.
தமிழக அரசுப் பேருந்து ஒன்று 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் நேற்று இரவு பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தது. மலைப்பாதையில் வளைவில் திரும்பிய போது, சாலையின் இடது புறத்தில் இருந்த பாறையில் மோதியதில், பேருந்தின் முன் பகுதி சேதமடைந்தது.
பேருந்து ஓட்டுனர் சுரேஷ் குமார், குடிபோதையில் வாகனத்தை இயக்கியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. பாறை இல்லாதிருந்தால், அந்த பேருந்து 500 அடி கிடுகிடு பள்ளத்தில் விழுந்து பெரிய விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று பயணிகள் அச்சத்துடன் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.