அரசு செய்யும் நல்ல விஷயங்களைக் கூட மனசாட்சி இல்லாத சிலர் தவறாக சித்தரிக்கிறார்கள்! உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,அரசு செய்யும் நல்ல விஷயங்களைக் கூட மனசாட்சி இல்லாத சிலர் தவறாக சித்தரிப்பதாகவும் தமிழக அரசு தொடர்ந்து மக்களுக்கான நலத்திட்டங்களை செய்து வரும் என்றும் கூறினார்.
கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த ஏழை பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கல்வி நிதி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் வேலுமணி பங்கேற்றார். பின்னர் பொதுமக்களிடையே பேசிய அவர், குடி மராமத்து பணிகள் சிறப்பாக நடைபெற்றதன் விளைவாக தற்போது பெய்து வரும் கனமழையால் அனைத்து குளங்களும் நிறைந்து வருவதாகக் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.