தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் HD ஒளிபரப்பு சேவை விரிவாக்கம் செய்யப்பட்டிருப்பதாக அரசு அறிவித்துள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியால் சென்னை, கோயம்புத்தூர், சேலம், மதுரை மற்றும் திருச்சி ஆகிய 5 நகரங்களில் துவக்கப்பட்ட HD ஒளிபரப்பு சேவை தற்போது தஞ்சாவூர், கிருஷ்ணகிரி, காரைக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய 4 பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
HD ஒளிபரப்பில் 380 SD சேனல்களுடன், 45 HD சேனல்களும் சேர்த்து மொத்தம் 425 சேனல்கள் வழங்கப்படும். HD சேனல்களுக் கான மாதக்கட்டணம் ரூ.225+GST ஆகும்.எனவே, மேற்கண்ட பகுதிகளில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் HD ஒளிபரப்பு சேவையை பெற விரும்பும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள உள்ளூர் கேபிள் ஆப்ரேட்டரை அணுகி ரூ.500/- செலுத்தி HD செட்டாப் பாக்ஸ் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
DINASUVADU
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…