அரசியல் மாற்றத்தை உருவாக்கியவர் கருணாநிதி : துரைமுருகன் பேச்சு..!!

இன்று சென்னையில் நடந்த திமுக தலைவர் முன்னாள் தலைவர் கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் முக்கிய அரசியல் தலைவர்கள் உரையாற்ற்றினர்
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவேந்தல் கூட்டம் சென்னையில் நடைபெறுற்றது.இக்கூட்டத்தில் பல்வேறு மாநில மற்றும் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர் .
குறிப்பாக முன்னாள் பிரதமர் தேவே கௌடா, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, குலாம் நபி ஆசாத், சீதாராம் யெச்சூரி, பிரஃபுல் படேல், ஃபரூக் அப்துல்லா, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கி.வீரமணி, வைகோ, பாலகிருஷ்ணன் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்..
இந்த நினைவேந்தல் கூட்டத்தில் திமுகவின் பொருளாளர் துரைமுருகன் பேசுகையில், கருணாநிதியை தவிர்த்து விட்டு திராவிட இயக்க வரலாற்றை யாராலும் எழுத முடியாது. அகில இந்திய அளவில் புகழ் பெற்றவர் தலைவர் கருணாநிதி. இந்திய அரசியல் அரங்கில் ஏற்பட்ட பல மாற்றங்களுக்கு மூல காரணமாக இருந்தவர். குமரி முனையில் நின்று இமயத்தைத் தொட்டுப் பார்த்தவர் தலைவர் கருணாநிதி . அவர் சிறந்த அறிவாளி, வசனகர்த்தா, மெய்மறக்கச் செய்யும் வகையில் பேச்சாற்றல் படைத்தவர். வங்கிகளை தேசியமயமாக்க வேண்டும் என்ற பொருளாதாரக் கொள்கையை அறிவித்தவர். சிறந்த நிர்வாகி, 50 ஆண்டுகள் திமுகவை திறம்படக் கட்டிக் காத்தவர் என்று அடுக்கடுக்காக மறந்த திமுக தலைவர் கருணாநிதியின் புகழை தொடர்ந்தார்.
DINASUVADU
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024