துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க நாளை தூத்துக்குடி செல்கிறார் ரஜினிகாந்த்.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். இந்நிலையில் 100வது நாள் போராட்டமான கடந்த 22ந் தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். ஆனால் பேரணி வன்முறையாக மாறியதால் போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்தனர்.மேலும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
இந்நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் நாளை தூத்துக்குடி செல்கின்றார். துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களை சந்திக்கிறார், காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் ஆறுதல் கூறுகிறார் நடிகர் ரஜினிகாந்த்.அரசியல் பிரவேச அறிவிப்புக்கு பின்னர் முதல்முறையாக மக்கள் பிரச்னைக்காக களம் இறங்குகிறார் ரஜினிகாந்த். சென்னையிலிருந்து நாளை காலை 8 மணிக்கு தூத்துக்குடிக்கு புறப்படுகிறார் ரஜினிகாந்த்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது. ஏலத்தில்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது.…
சென்னை : போலி வாக்குகளை தடுக்க தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை பகுஜன் சமாஜ் கட்சி இடைத்தேர்தலில் போட்டியிடாது…
கோவை : நல்லட்டிபாளையம், மேட்டுபாவி, பனப்பட்டி பகுதி, கொத்தவாடி கள்ளக்குறிச்சி : 22KV குருபீடபுரம் 22KV மலைகொத்தளம் 22KV லட்சியம்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழக்தில் ஒரு சில தினங்களாக கனமழை…
சென்னை : இவர்களுக்குள் இப்படியா? என்கிற வகையில் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது என்றால் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடைய விவாகரத்து தான். 29…