தமிகத்தில் தற்போது பரவி வரும் கலச்சாரமாக பேனர் உருவாகியுள்ளது.சாலைகளை மறித்து பேனர் வைப்பது,போன்ற மக்களுக்கு இடையூறு தரும் வகையில் பேனர் வைக்கப்படுதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்குகள் இன்று விசாரனைக்கு வந்தது.இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
பேனர் வைப்பது குறித்து மாநகராட்சியிடம் கேள்விகள் கேட்கப்பட்டது.பின்னர் நீதிபதிகள் பேனர் வைக்கின்ற எந்த அரசியல் கட்சியினர் மீதும் மாநகராட்சியால் நடவடிக்கை எடுக்க முடிய வில்லை அவ்வாறு இருந்தாலும் பேனர் வைக்கப்படுகின்ற போது ஒவ்வொரு பேனரிலும் யார் விண்ணப்பிக்கிறார்கள், அதை யார் பிரிண்ட் செய்கிறார்கள்.
மேலும் எந்த தேதியில் அனுமதி வழங்கப்பட்டுதுள்ளது என்ற விவரங்கள் எல்லாம் இடம்பெற்றிருக்க வேண்டும் இந்த விதிமுறைகள் எல்லாம் பின்பற்றாத நிறுவனங்கள் மீது கூட ஏன் நடவடிக்கை இல்லை என கேள்வி எழுப்பினர்.மேலும் கண்டனங்களை தெரிவித்த நீதிபதிகள் விதிமீறல் டிஜிட்டல் பேனர்களை அகற்ற வேண்டும் போது அது சுற்றுப்புறச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் அகற்ற வேண்டும்.
இதற்கு முறையாக நடவடிக்கை எடுப்பதில்லை என்று தெரிவித்த நீதிபதிகள் விதிமீறி வைக்கப்படுகின்ற பேனர்கள் குறித்த விழிப்புணர்வு அதிகாரிகளுக்கு உள்ளதா..? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் அரசியல் கட்சிகளின் விதிமீறல் பேனர்கள் மீது உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முடியாவிட்டால் தங்களது பதவியை ராஜினாமா செய்யுங்கள், பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதே கட்சியில் சேர்ந்து விடுங்கள் என்று அரசு அதிகாரிகள் மீது உயர்நீதிமன்ற நீதிபதிகள் தங்களது அதிருப்தி தெரிவித்தனர்.மேலும் இது தொடர்பான விரிவான விளக்கத்தை நாளை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தர பிறப்பித்தனர்.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…