அரசியல் இனி சினிமாவில் வேண்டாம்!அதிரடி முடிவு எடுத்த ரஜினி
நடிகர் ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்திற்காக டார்ஜிலிங் மலைப்பகுதிகளில் நடந்து வரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். தான் நடிக்கும் படங்கள் வெளியாகும் நாளில் சென்னையில் இருப்பதை எப்போதுமே தவிர்த்து விடுவார். இந்த முறை படப்பிடிப்பை தேர்ந்தெடுத்தார்.
ரஜினி செல்வதற்கு 3 நாட்களுக்கு முன்பே படப்பிடிப்பை தொடங்கி விட்டனர். படப்பிடிப்பில் இருந்தபடியே ‘காலா’ படம் பற்றி விசாரித்தார். படத்துக்கு எல்லா தரப்புகளில் இருந்தும் நல்ல விமர்சனங்கள் கிடைத்ததால் உற்சாகம் ஆனார்.
ரஜினி நடிக்கும் எல்லா படங்களிலும் இளமையான தோற்றத்தில் சில காட்சிகளிலாவது வருவார். அப்படி காலாவில் இல்லை. அதோடு தன் வயதுக்கேற்ற ஜோடியுடன் நடித்து இருந்தார். எனவே இந்த மாற்றங்களை தனது ரசிகர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்ற தயக்கம் இருந்தது. ஆனால் தனது ரசிகர்கள் படத்தை ஏற்றுக் கொண்டது ரஜினிக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த படத்தில் ரஜினி மொத்தமே 30 நாட்கள் தான் நடிக்கிறார். அடுத்த கட்ட படப்பிடிப்பு மதுரையில் நடக்கிறது. அதில் ரஜினிக்கான காட்சிகள் திட்டமிடப்படவில்லை. இந்த படத்தின் வசனம், காட்சி எதிலும் அரசியல் வேண்டாம் என்று ரஜினி ஆரம்பத்திலேயே கூறிவிட்டார்.
படப்பிடிப்புக்கு முன்னர் முழு கதையை படிக்கும்போதும் அதை சரிபார்த்துக்கொண்டார். காலா படத்தில் பேசப்பட்ட அரசியல் என்பது ரஜினிக்கு மைனசாக அமைந்தது என்கிற கருத்துக்கள் பரவலாக உள்ளன. எனவே சர்ச்சையை தவிர்க்க ரஜினி நடித்துவரும் படங்களில் இனி அரசியல் இருக்காது என்றே தெரிகிறது.
சென்னை வந்தபிறகு ஒட்டுமொத்தமாக மீண்டும் நிர்வாகிகளை சந்தித்து பேச உள்ளார். அதன் பின்னர் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தொடங்கும். மாநாட்டிலேயே கட்சி பெயர் அறிவிக்கப்படலாம்’ என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.