முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ,காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பது குறித்து அரசிதழில் வெளியிடப்பட்டிருப்பது தமிழக மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் காவிரி விவகாரம் குறித்துப் பேசிய அவர், தமிழக விவசாயிகளின் உரிமை மீட்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அப்போது பேசிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், காவேரி பிரச்சினைகளில் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசும் பல வழக்குகளையும் போராட்டங்களையும் மேற்கொண்டதாகத் தெரிவித்தார்.
எனவே காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து அரசிதழில் வெளியிடப்பட்டிருப்பதில் தி.மு.க.வுக்கும் பெரும்பங்கு உள்ளதாகவும், இந்த நேரத்தில் கருணாநிதியை நினைவு கூர வேண்டும் என்றும் அவர் கூறினார். குறுவை சாகுபடிக்கு ஜூன் 12ஆம் தேதி காவேரி தண்ணீர் திறக்க நடவடிக்கைகள் எடுக்கவும் துரைமுருகன் வலியுறுத்தினார்.