பாரதிய ஜனதா கட்சியினர் ,திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில், நஞ்சில்லா உணவின் அவசியம் குறித்து விழிப்புணர்வு பரப்புரையில் ஈடுபட்ட அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
77ஆவது நாளாக இந்த பரப்புரையில் ஈடுபட்டு வரும் அய்யாக்கண்ணு, வந்தவாசி தேரடி வீதியில், விழிப்புணர்வு நோட்டீஸ்களை விநியோகம் செய்தபோது இந்த சம்பவம் நடைபெற்றது. அப்போது, மரபணு மாற்றப்பட்ட விதை பயன்பாட்டிற்கு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சி மீது பாஜகவினர் குற்றம்சாட்ட, நோட்டீஸ் அளித்த விவசாயிகளோ, மோடி அரசின் மீது குறை கூறினர்… அப்போது, தங்களுக்குள், யார் உண்மையான விவசாயி என்பது குறித்து கடுமையான வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்….
இதையடுத்து, இரண்டு தரப்பையும் காவல்துறையினர் அமைதிப்படுத்த எடுத்த முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. பின்னர், ஒருவழியாக, அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகளை, அவர்கள் வந்த காரில் ஏற்றி, காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்…
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெக்ஸாஸ் : உலகம் முழுவதும் பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்த மைக் டைசன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த யூட்யூபர் ஜேக்பால்…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை 2 வாரங்களுக்கு பின் நேற்று உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி,…
சென்னை : கங்குவா திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய ஹிட் ஆகும் நிலையில் , வெளியான நாளிலிருந்தே…
திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் சபரிமலையில் அமைந்துள்ள ஐயப்பன் கோயில் நேற்று மாலை மண்டல பூஜைக்காக திறக்கப்பட்டது.…
சென்னை : கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (நவம்பர் 16) சர்வதேச கருத்தரங்கு ஒன்று நடைபெற உள்ளது. இதில்…
தென்னாபிரிக்கா : இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி தொடரை…