அம்மன் கோவிலில் திருடிய கொள்ளையன் இறுதியில் அம்மனுக்கு 50 ரூபாய் காணிக்கை வைத்து சென்ற சம்பவம் கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குலசேகரம் ஸ்ரீ கிருஷ்ணா பால விருந்தாலைய கோவிலை முன்னாள் எம்எல்ஏ அப்பு நடேசன் நிர்வகித்து வருகிறார்.
இந்த நிலையில் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையன் அங்கு எந்த பதற்றமும் இன்றி சுமார் 3 மணி நேரமாக திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கோவிலை சுற்றி உள்ள 7 உண்டியல்களையும் உடைத்து சில்லறையை கொட்டிவிட்டி அதில் இருந்த ரூபாய் நோட்டுக்களை மட்டும் திருடியதாகவும் இறுதியில் கிருஷ்ணர் விக்கிரகம் முன் 50 ரூபாய் நோட்டை மட்டும் காணிக்கை வைத்து விட்டு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி “நீட் தேர்வை…
சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதிலுரையாற்றி வருகிறார். அப்போது…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கிய நிலையில், நேற்று ஐந்தாவது நாளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்…
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது அயர்லாந்துக்கு எதிராக 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…
டெல்லி : மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருந்த கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஷங்கர்…
சென்னை : நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய…