சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கோடைக்கால நோயிலிருந்து காத்துக் கொள்ள கொளுத்தும் வெயிலில் வெளியே நடமாடுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
புதுக்கோட்டைபேருந்துநிலையத்தில் அதிமுக சார்பில் கோடைக்கால தண்ணீர்பந்தலை திறந்து வைத்த அமைச்சர் விஜயபாஸ்கர், பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். வெயில் கொளுத்தும் வேளையில் முதியவர்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் வெளியே செல்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்ட அவர், அம்மை நோய் வராமல் தடுக்க இருவேளை குளிக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை சார்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.