குட்கா குடோன் நிறுவன உரிமையாளர் மாதவ ராவ் கைதாகி உள்ள நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
நேற்று குட்கா விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் 40 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.குட்கா விற்பனையாளர் மாதவராவின் வீட்டில் கிடைத்த டைரியின் அடிப்படையில் ரெய்டு நடைபெற்றது.
இதன் காரணமாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு ,முன்னாள் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் வீடுகளிலும் ,தமிழக டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் வீடு, முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
இந்நிலையில் குட்கா வழக்கில் சிபிஐ நடத்திய சோதனையின் முடிவில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .அதில் குட்கா குடோன் நிறுவன உரிமையாளர ஏ.வி மாதவ ராவ், உமா சங்கர் குப்தா, பாண்டியன், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே இன்று காலை குட்கா ஊழல் வழக்கில் ராஜேஷ், நந்தகுமார் ஆகிய இரு இடைத்தரகர்கள் இன்று கைது செய்யப்பட்டனர் .இதுவரை ஊழல் தொடர்பாக 6 பேரை கைது செய்தது.
இந்நிலையில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் குட்கா குடோன் நிறுவன உரிமையாளர் ஏ.வி மாதவ ராவ் கைதாகி உள்ளதால் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குட்கா குடோன் நிறுவன உரிமையாளர் மாதவ ராவ் கைதாகி உள்ள நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே சி.பி.ஐயிடம் மாதவராவ் அப்ரூவராக மாறியதுடன் டைரியில் இல்லாத மேலும் பல கொடுக்கல் வாங்கல் விவரங்களை கூறியுள்ளார். இதனை தொடர்ந்தே நேற்று காலை அதிரடியாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தற்போதைய டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் மற்றும் முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்டோரின் வீடுகளுக்குள் புகுந்தது சி.பி.ஐ என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…