அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் உயர் நீதிமன்றம் உத்தரவு..!
தமிழக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக அளிக்கப்பட்ட புகார் குறித்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை மீண் டும் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
இதுதொடர்பாக மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்தி ரன் என்பவர் கடந்த 2014-ல் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக் கல் செய்திருந்த மனுவில் கூறி யிருப்பதாவது:
தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு ராஜபாளையம் அருகே தேவதானத்தில் ரூ.74 லட்சம் மதிப்புக்கு 35 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தின் அசல் மதிப்பு ரூ.6 கோடி. அதேபோல திருத்தங்கல் பகுதியில் ரூ.23.33 லட்சத்துக்கு 2 வீட்டு மனைகளும், ரூ.4.23 லட்சத்துக்கு 75 சென்ட் நிலமும் உள்ளது. இவற் றின் சந்தை மதிப்பு ரூ.1 கோடிக்கும்அதிகமாகும்.
தனது பதவியை துஷ்பிரயோ கம் செய்து பல கோடி ரூபாய்க்கு மேல் வருமானத்துக்கு அதிக மாக சொத்துகளை குவித்துள்ளார். எனவே அவர் மீது வழக்குப்பதிய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என கோரி யிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஏற்கெனவே விசாரித்தது. அமைச்சர் மீதான புகாருக்கு எந்த ஆதாரமும் இல்லை என லஞ்ச ஒழிப்புத் துறையும் கூறவே, அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து அரசுக்கும் அறிக்கை அனுப்பப்பட்டது.
இதையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதிகள் நேற்று பிறப்பித்த உத்தரவில், கூறியிருப்பதாவது:
அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான சொத்து குவிப்பு தொடர்பான புகாரை லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் முறையாக விசாரிக்க வேண்டும். போலீஸார் கடந்த 2011 – 13 காலகட்டத்தை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு விசாரணை நடத்தியுள்ளனர். அந்த ஆரம்பகட்ட விசாரணையில் முகாந்திரம் இல்லை எனக்கூறி புகாரை முடித்துள்ளனர். இது சரியானதல்ல.
அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஏற்கெனவே கடந்த 1996-ல் திருத்தங்கல் பேரூராட்சியின் துணைத் தலைவராகவும்பதவி வகித்துள்ளார். அப்போதிருந்தே அவர் பொது ஊழியராகத்தான் இருந்துள்ளார். அந்த பதவியையும் கணக்கில் எடுத்துக் கொண்டு விசாரிக்க வேண்டும். எனவே கடந்த 1996-ல் இருந்து 2018 பிப்ரவரி வரையிலான காலகட்டத்தை கணக்கில் எடுத்துக் கொண்டு, அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப் பில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டியது அவசியமாகிறது.
எனவே ராஜேந்திரபாலாஜிக்கு எதிரான புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பி அந்தஸ்துக்கு குறையாத ஐபிஎஸ் அதிகாரியைக் கொண்டு முழுமையாக விசாரிக்க வேண்டும்.
விசாரணை தொடர்பான அறிக்கையை குறிப்பிட்ட காலஇடைவெளியில் அவ்வப்போது சீலிட்ட கவரில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். முதல் அறிக்கையை வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 6-க்கு தள்ளி வைத்தனர்.