அமைச்சர் பதவியிலிருந்து செந்தில் பாலாஜி ராஜினாமா
அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்துள்ளார். சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கடந்த 2023 ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீடு, அவரது உறவினர்கள், நண்பர்கள், ஒப்பந்ததாரர்களின் வீடுகள், அலுவலகங்கள், கல்குவாரி உள்ளிட்ட20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறையினர்பல முறை சோதனை நடத்தினர்.
இதற்கிடையே, புழல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 19-வது முறையாக வரும் 15-ம் தேதி வரை அண்மையில் நீட்டிக்கப்பட்டது. இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்ந்து வந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் அவர் வீட்டில் அமலாக்க துறை சோதனை நடத்தினார்கள்.
பஞ்சமி நில விவகாரம்: முரசொலி அறக்கட்டளை மீதான புகாரில் நடவடிக்கை எடுக்க தடை
இந்த நிலையில் இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்து வந்த செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை சற்று முன்னர் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார், ராஜினிமா கடிதத்தை அவர் ஆளுநருக்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.