அமைச்சர் ஜெயக்குமார் இல்லத்தின் முன் நண்டுவிடும் போராட்டம்!
சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அமைச்சர் ஜெயக்குமார் இல்லத்தின் முன் நர்மதா நந்தக்குமார் நண்டுவிடும் போராட்டம் ஈடுபட்டார்.
சென்னையை அடுத்த பட்டினம்பாக்கத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் இல்லம் உள்ளது.இன்று அமைச்சரின் வீட்டிற்கு வந்த பெண் நூதனமாக போராடினார். அவர் பட்டினப்பாக்கத்தில் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட வீடுகளை அமைச்சர் சரி செய்யாததை கண்டித்து நண்டுகளை விட்டு நூதனமாக போராட்டத்தில் ஈடுபட்டார்.