அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினரை  முன்விரோத தகராறில் 5 பேர் கொண்ட கும்பல் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை!

Published by
Venu

அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினரை  முன்விரோத தகராறில் 5 பேர் கொண்ட கும்பல் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவக்குமார் காசிமேடு, அமராஞ்சிபுரத்தை சேர்ந்தவர். ராயபுரத்தில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.
இன்று காலை அவர் காசிமேடு காசிபுரம் பி பிளாக் கில் உள்ள கடைக்கு சென்று டீக்குடித்துக் கொண்டு இருந்தார்.

அப்போது மறைந்திருந்த 5 பேர் கும்பல் திடீரென கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் சிவக்குமாரை சுற்றி வளைத்தனர்.
அதிர்ச்சி சிவகுமார் கொலை வெறி கும்பலிடம் இருந்து தப்பிக் ஓட்டம் பிடித்தார். ஆனால் அவர்கள் ஓட, ஓட விரட்டி சிவக்குமாரை சரமாரியாக வெட்டினர்.

தலை, முதுகு, கழுத்தில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

இதற்கிடையே உயிருக்கு போராடிய சிவக்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இருந்தார்.

இது குறித்து காசிமேடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தீவிர விசாரணை நடத்தினர். இதில் அதே பகுதியை சேர்ந்த ஓருவருடன் ஏற் பட்ட முன்விரோதத்தில் சிவக்குமார் தீர்த்து கட்டப் பட்டிருப்பது தெரிந்தது.

மற்றொன்று, அமராஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவருக்கும், சிவக்குமாருக்கும் கால்வாய் தொடர்பாக கடந்த 1 ஆண்டுக்கு மேலாக பிரச்சினை இருந்துள்ளது. இதுபற்றி சிவக்குமார் பலமுறை போலீசில் புகார் செய்துள்ளார். இதனால் அவர்களுக்கிடையேயான மோதல் வலுத்துள்ளது.

இந்த தகராறில் கூலிப் படையை ஏவி சிவக்குமாரை செதில் செதிலாக வெட்டி வீழ்த்தியுள்ளனர்.
மேலும் சிவகுமாருக்கும், அதே பகுதியை சேர்ந்த கஞ்சா வியாபாரி ஒருவருக்கும் தகராறு உள்ளது. அவரை பற்றி சிவகுமார் போலீசாருக்கு தகவல் சொல்லப்பட்டது. இதனையடுத்து சடலத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக போட்டி – செல்வப்பெருந்தகை அறிவிப்பு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக போட்டி – செல்வப்பெருந்தகை அறிவிப்பு!

ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…

6 minutes ago

“ஹிந்தி தேசிய மொழி இல்லை…அஸ்வின் சொன்னது சரி தான்” – அண்ணாமலை!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் ஜனவரி 9-ஆம்…

22 minutes ago

கிடைத்தது முக்கிய அங்கீகாரம்… இனி நாம் தமிழர் கட்சியும் ஒரு மாநில கட்சி!

சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…

9 hours ago

த.வெ.க மாவட்ட செயலாளர்கள் நியமன குழப்பம்! அடுத்தடுத்த நகர்வுகள் என்ன?

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…

9 hours ago

இஸ்ரோ வெளியிட்ட ஹேப்பி நியூஸ்! நாளை விண்ணில் ‘மிக’ முக்கிய நிகழ்வு!

டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…

11 hours ago

சட்டப்பேரவையில் காரசார விவாதம்.. ஈபிஎஸ்க்கு சவால் விடுத்த மு.க ஸ்டாலின்!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…

12 hours ago