தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ,சென்னையில் நான்கு நாட்களாக நடைபெற்று வந்த இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்தில் ,அவர் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து வாபஸ் பெறப்பட்டது. தமிழக பள்ளி கல்வித்துறையை சேர்ந்த இடைநிலை ஆசிரியர்கள், ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளி வளாகத்தில் நான்கு நாட்களாக உண்ணவிரதப் போராட்டம் நடத்தி வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுடன் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து போராட்டத்தை வாபஸ் பெறுவதாக ஆசிரியர்கள் அறிவித்தனர். அவர்களுக்கு பழச்சாறு கொடுத்து அமைச்சர் செங்கோட்டையன் உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்தார். சென்னையில் போராட்டம் முடிந்து ஊர் திரும்பும் இடைநிலை ஆசிரியர்களுக்கு வசதியாக, கோயம்பேடு, சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட இடங்களுக்கு போலீசாரே பேருந்துகளை ஏற்பாடு செய்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…