அமைச்சர்களாக அல்லாமல் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் ஒருவராக பணியாற்றுகிறோம்….அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி…!!
தமிழக அமைச்சர்கள், அமைச்சர்களாக பணியாற்றாமல் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் ஒருவராக பணியாற்றி வருவதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.
திருவாரூரில்,மீட்பு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு, உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜு, தமிழக அமைச்சர்கள், அமைச்சர்களாக பணியாற்றாமல் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் ஒருவராக பணியாற்றி வருவதாக குறிப்பிட்டார். பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை கேட்டு அதை உடனடியாக தீர்க்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாகவும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
dinasuvadu.com