அமெரிக்கா மருத்துவமணைக்கு செல்கிறார் நடிகர் ரஜினி !அதிர்ச்சி தகவல் !

Default Image

ரஜினி நடித்துள்ள ‘காலா’ படம் திரைக்கு வர தயாராக இருக்கிறது. ‘2.0’ படமும் வெளியாக உள்ளது. இந்த நிலையில் புதிய படம் ஒன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். எனவே இப்போது அரசியல் கட்சி தொடங்கமாட்டார் என்ற பேச்சு எழுந்தது. இப்போது கட்சி தொடங்கும் எண்ணம் ரஜினியிடம் இல்லை என்று பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

எனவே விரைவில் கட்சி தொடங்குவார் என்ற நம்பிக்கையுடன் அவருடைய ரசிகர்கள் இருந்து வருகின்றனர். சமீபத்தில் போலீசாருக்கு ஆதரவாக ரஜினி கருத்து வெளியிட்டதற்கு கடும் விமர்சனம் எழுந்தும் இதுவரை ரஜினி எந்தவித பதிலும் தெரிவிக்கவில்லை. கட்சி பெயரை அறிவிப்பதற்கான எந்த ஏற்பாடுகளும் நடை பெறவில்லை.

அரசியல் சூடுபிடித்துள்ள இந்த வேளையில் ரஜினிகாந்த் அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளார். விரைவில் இதற்கான தேதி அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. ஒரு வார காலம் அமெரிக்காவில் ரஜினி சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறார்.

இது பற்றி ரஜினியின் நெருங்கிய வட்டாரத்தில் கேட்டபோது, ‘‘ரஜினி ஏற்கனவே அமெரிக்கா செல்ல திட்டமிட்டு இருந்தார். வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக செல் கிறார். வேறு காரணம் எதுவும் இல்லை’’ என்று தெரிவித்தனர்.

ரஜினி அமைதியாக இருந்தாலும் கட்சி தொடங்கு வதற்கான அனைத்து
ஏற்பாடுகளையும் ஏற்கனவே செய்து விட்டார். கட்சியின் அடிப்படையை பலப்படுத்தும் பணியில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். சரியான நேரத்தில் கட்சியின் பெயரை அறிவிப்பார். சட்டமன்ற தேர்தலுக்கு நாள் இருக்கிறது. அதற்கு முன்பாக பெயரை அறிவித்து விட்டு மக்களை சந்திப்பார். இதில் எந்த மாற்றமும் இல்லை என்று ரஜினி மக்கள் மன்ற முக்கிய நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் இன்று சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் ரஜினியுடன், நடிகர் ஆனந்தராஜ் சந்தித்து அரைமணி நேரம் ஆலோசனை நடத்தினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்