அமமுக அமைப்பு செயலாளர் கே.கே.சிவசாமி, எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
அதிமுகவை நாடும் நிர்வாகிகள்:
அதிமுகவில் இரட்டை தலைமை பிரச்சனை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு பின் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக பாஜக மற்றும் அமமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இணைந்து வருகின்றனர்.
பாஜகவை தொடர்ந்து அமமுக:
பாஜகவினரை அதிமுகவில் இணைத்து கொண்டதற்கு அக்கட்சி தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள் கண்டனங்களை தெரிவித்து விமர்சித்து இருந்தனர். இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலர் எதிர்வினையாற்றினர். இந்த சமயத்தில், பஜவினரை தொடர்ந்து அமமுக நிர்வாகிகளும் அதிமுகவில் இபிஎஸ் அணியில் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
அமமுக நிர்வாகிகள்:
அந்தவகையில், மார்ச்12 அமமுக தலைமை நிலைய செயலாளரும், திருப்பத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கே.கே உமாதேவன் மற்றும் அமமுக செய்தி தொடர்பாளரும், மாநில இளைஞரணி செயலாளராக இருந்த கோமல் ஆர்.கே அன்பரசன் உள்ளிட்ட நிர்வாகிகள் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
அமமுக அமைப்பு செயலாளர்:
இதையடுத்து, மார்ச்.13 அமமுக மாநில இளம் பெண்கள் பாசறைச் செயலாளர் டாக்டர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இந்த நிலையில், அமமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.கே.சிவசாமி, இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று அதிமுகவில் இணைந்துள்ளார்.
ராஜ்கோட்: மகளிருக்கான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அயர்லாந்தை 116 ரன்கள் வித்தியாசத்தில்இந்திய அணி வீழ்த்தியது. இதன் மூலம் 3 போட்டிகள்…
கோவை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவையில் பாஜக விவசாயி அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் தோட்டத்தில் நேற்று நடைபெற்ற பொங்கல் விழாவில்…
சென்னை: துபாயில் நடைபெற்ற சர்வதேச அளவிலான 24H சீரிஸ் கார் ரேஸின் 991 பிரிவில் மூன்றாவது இடம்பிடித்து அசத்தியுள்ளது அஜித்குமார்…
சென்னை: தமிழ்நாட்டில் 2 மாவட்டங்களுக்கு மட்டும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி கடலூர்…
சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…