அப்போலோ மருத்துவர் அர்ச்சனாவும், செவிலியர் ரேணுகாவும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு ஆஜர்!
நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது பதிவு செய்யப்பட்டு அண்மையில் வெளியான ஆடியோவில் குரல் இடம்பெற்றுள்ள அப்போலோ மருத்துவர் அர்ச்சனாவும், செவிலியர் ரேணுகாவும் ஆஜராகியுள்ளனர்.
அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது, பதிவு செய்யப்பட்டதாக கூறப்பட்ட ஆடியோ பதிவு, கடந்த 26ஆம் தேதி வெளியானது. இதனைத் தொடர்ந்து, கடந்த சனிக்கிழமையன்று நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜரான சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், ஆடியோ பதிவில் இடம்பெற்றுள்ளவர்களை சம்மன் அனுப்பி விசாரிக்க கோரினார்.
இதையடுத்து, அந்த ஆடியோவில் உள்ள குரலுக்கு உரியவரானஅப்போலோ மருத்துவர்கள் அர்ச்சனா, பிரசன்னா, செவிலியர்கள் ரேணுகா, ஷீலா ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இவர்களில், அப்போலோ மருத்துவர் அர்ச்சனா, இன்று காலை 10 மணியளவிலும், செவிலியர் ரேணுகா காலை 11 மணியளவிலும், நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகினர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.