அபிராமிக்கு என்ன அச்சு..? மருத்துவர் சொல்கிறாரார்..!!
புழல் சிறையில் அபிராமி திடீர் மயக்கம்…
சென்னை
குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம் கட்டளை பகுதியை சேர்ந்தவர் விஜய் (30). தனியார் வங்கியில் முக்கிய பொறுப்பில் பணியாற்றி வரும் இவருக்கு அபிராமி (25) என்ற மனைவியும், அஜய் என்ற மகனும், கார்னிகா என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.
வேலை காரணமாக விஜய்யால் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வீட்டிற்கு வரமுடியவில்லை. இதையடுத்து, அடுத் நாள் அதிகாலை வீடு திரும்பிய அவர், தனது இரண்டு குழந்தைகளும் வாயில் நுரைதள்ளியபடி இறந்து கிடந்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ், குழந்தைகளின் உடல்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். அப்போது நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில், தாய் அபிராமி பிரியாணிக் கடையில் வேலை செய்யும் சுந்தரம் என்ற ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருப்பதும், இதனால் கணவன்-மனைவி இடையே சமீபகாலமாக பிரச்சனை ஏற்பட்டதும் தெரியவந்தது.
நாகர்கோவிலில் கைது செய்யப்பட்ட அபிராமி தீவிர விசாரணைக்கு பிறகு சென்னை புழலில் உள்ள மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார். 3 பெண்கள் தங்கக்கூடிய அந்த சிறை அறையில் முதல் நாளில் இருந்து சரியாக சாப்பிடாமலும், தூங்காமலும் அபிராமி இருந்துள்ளார்.சாப்பிடுவதற்கு அழைத்து சென்றால் அங்கு கூட்டம் கூட்டமாக வந்து சக கைதிகள் வேடிக்கை பார்த்தார்களாம். அந்த அளவிற்கு ஜெயிலில் அபிராமி பிரபலமாகியுள்ளார்.
இந்த நிலையில் தான் நேற்று மாலை அபிராமி திடீரென மயக்கமாகியுள்ளார். பின்னர் சிறை மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது நலமாக உள்ளாராம்.தொடர்ந்து உணவு எடுக்காததும், தவறின் விரீயம் என்ன என்று கூட புரியமால், காமமோகத்தால் செய்துவிட்டு அது கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து வருவதில் தாக்கம் தான் தற்போதைய மன அழுத்ததிற்கு காரணம் என்கிறார்கள் அபிராமியை சிகிச்சையளித்த மருத்துவர்கள்.
DINASUVADU