அநாகரீகம் ! கள்ள உறவால் பிறந்தவர் கனிமொழி என ஹெச்.ராஜா ட்வீட்..!

Default Image

தமிழக பாஜக மாநிலச்செயலாளர் எச்.ராஜா  சிறிது அளவு  நாவடக்கமின்றி,  நாகரீகம் ஏதுமின்றி தொடர்ச்சியாக தமிழக அரசியல் தலைவர்களை தகாத வார்த்தைகளில்   விமரிசித்துவருகிறார். “தமிழர்களின் தலைநிமிர்வு” தந்தை பெரியாரின் சிலைகள் உடைக்கப்பட வேண்டும் என்ற அளவுக்கு வன்மத்துடன் எதிர்கொள்கைகளை உடைய தலைவர்களை விமர்சித்துவருகிறார்.

தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில், “தன் கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தையை (illegitimate child) மாநிலங்களவை உறுப்பினராக்கிய தலைவரிடம் ஆளுநரிடம் கேட்டது போல் நிருபர்கள் கேள்வி கேட்பார்களா. மாட்டார்கள். சிதம்பரம் உதயகுமார், அண்ணாநகர் ரமேஷ், பெரம்பலூர் சாதிக் பாட்ஷா நினைவு வந்து பயமுறுத்துமே.” என தமிழகத்தின் முதுபெரும் அரசியல் தலைவர் கலைஞரையும், திமுக மாநிலங்களவை எம்.பி கனிமொழி அவர்களையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதற்கு முன்பு , தந்தை பெரியாரின்  சிலைகள் உடைக்கப்பட வேண்டும் என ஹெச்.ராஜா தெரிவித்த போது அவருக்கு எதிராக கடுமையான போராட்டங்கள் தமிழக மக்களால் முன்னெடுக்கப்பட்டதும், அந்த கருத்தினை தாம் கூறவில்லை தமது ட்விட்டர் பக்கத்தினை நிர்வகிக்கும் அட்மினே பதிவிட்டார் என மன்னிப்பு கோரியது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்