அதிர்ச்சி …” நீட் தேர்வால் அடுத்த மரணம் ” தமிழகத்தை சுடுகாடாக மாற்றும் நீட் தேர்வு..!!
சேலையூரில் நீட் தேர்வு எழுதி நல்ல மதிப்பெண் கிடைத்தும் சீட் கிடைக்காததால் மாணவி ஏஞ்சலின் ஸ்ருதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த அனிதா மருத்துவ படிப்பு படிக்க முடியாத காரணத்தினால் கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளிவந்தபோது, அனிதாவின் மதிப்பெண்கள் 1176. பள்ளிக்கூடத்திலேயே ஆறாவது அதிக மதிப்பெண். பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் சேர்க்கை நடந்தால் அனிதாவுக்கு சென்னையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளிலேயே இடம் கிடைத்துவிடக் கூடிய நிலைதான். ஆனால், நீட் அனிதாவை காவு வாங்கிவிட்டது.
இதனையடுத்து, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பெருவளூர் கிராமத்தை சேர்ந்த பிரதீபா நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்டார். உயிரிழந்த பிரதீபா பிளஸ் டூ தேர்வில் 1125 மதிப்பெண் பெற்றவர் ஆவார். கடந்த ஆண்டு சித்தா படிக்க வாய்ப்பு கிடைத்தும் எம்.பி.பி.எஸ் படிக்க வேண்டுமென்று, இந்தாண்டு பிரதீபா நீட் தேர்வு எழுதியிருந்தார்.
கடந்த ஆண்டு நீட் தேர்வில் 155 மதிப்பெண்கள் பெற்ற நிலையில், தனியார் கல்லூரியில் இடம் கிடைத்தது. ஆனால் போதிய பணம் இல்லாததால் அரசு கல்லூரியில் இந்த சேர்ந்து விடலாம் என காத்திருந்தார். இந்த நிலையில் அரசு கல்லூரியில் சீட் பெறும் வகையில் இரண்டாம் முறையாக நீட் தேர்வு எழுதிய பிரதீபாவுக்கு 39 மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்துள்ளது. அதனால் மன வருத்தத்தில் இருந்த அவர், எலி மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்நிலையில், சென்னை சேலையூரை சேர்ந்த ஏஞ்சலின் ஸ்ருதி என்ற மானவி நீட் தேர்வு எழுதி சீட் கிடைக்காத சோகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஏற்கனவே அரியலூர் அனிதா மற்றும் செசி பிரதிபா தற்கொலை செய்துகொண்ட நிலையில் நீட் மூன்றாவதாக ஒரு மாணவியின் உயிரை காவு வாங்கிவிட்டது.
தற்கொலை செய்துகொண்ட மாணவி ஏஞ்சலின் மருத்துவ சீட் கிடைக்காததால் மூன்று மாதம் மனஉளைச்சலில் கஷ்டப்பட்டுள்ளார். சென்னையில் நீட் தேர்வு எழுதி சீட் கிடைக்காததால் மாணவி ஏஞ்சலின் சுருதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தமிழகம் அனிதா என்ற மாணவியை இழந்து உள்ளது. இந்த நிலையில் தற்போது இன்னொரு மாணவியும் நீட் தேர்வு காரணமாக பலியாகியுள்ளது தமிழகத்தில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது..
DINASUVADU