அதிர்ச்சி தகவல்!தமிழக அரசு பேருந்துகளில் கட்டண உயர்வு?மக்களை அவதிப்படுத்தத் தயாரான போக்குவரத்து கழகம்!
நாள் ஒன்றுக்கு,டீசல் விலை உயர்வால் 9 கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்து வரும் அரசுப் போக்குவரத்து கழகம், தமிழகம் முழுவதும் இரண்டாயிரம் வழித்தடங்களில் அரசுப் பேருந்துகளின் சேவையை நிறுத்தியிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
டீசல் மானியம் ரத்து, போக்குவரத்து ஊழியர்களின் சம்பள உயர்வு போன்றவற்றால் நாள் ஒன்றுக்கு 8 கோடி ரூபாய் இழப்பிடு ஏற்பட்டுள்ளது.
டீசல் விலை உயர்வு கூடுதலாக ரூ.1 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
டீசல் விலை உயர்வு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களை கடுமையான நிதி நெருக்கடியில் தள்ளியுள்ளது.இழப்பை ஈடுகட்ட சத்தமே இல்லாமல் போக்குவரத்து கழங்கள் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.
தமிழகம் முழுவதும் 2,000 வழித்தடங்களில் அரசுப் போக்குவரத்து சேவையானது அடியோடு நிறுத்ததப்பட்டுள்ளது.
4000 வழித்தடங்களில் பேருந்துகளின் எண்ணிக்கையானது குறைக்கப்பட்டுள்ளது.
8 போக்குவரத்துக்கழகங்கள் நாள் ஒன்றுக்கு பயன்படுத்தும் 20 லட்சம் லிட்டர் டீசலை. 17 லட்சம் லிட்டராக குறைக்கவும் திட்டம் உள்ளது.
பேருந்து கட்டண உயர்வால் 30 லட்சம் மக்கள் மாற்று போக்குவரத்து நாடியதால், 10% மட்டுமே வருவாய் உயர்ந்துள்ளது. தொடர்ந்து டீசல் விலை உயருமானால், அரசுப் பேருந்துகளில் கட்டணம் உயர வாய்ப்புள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.