அதிரடியில் இறங்கிய கமல்ஹாசன்! அவசியம் இருந்தால் உள்ளாட்சித் தேர்தலில் போட்டி!போட்டியிடுவதற்கான பணிகள் தொடக்கம்!

Published by
Venu

அவசியம் இருந்தால் உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என்று  மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

25 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சட்டம் இயற்றப்பட்டது. அரசியல் சுயநலம் மற்றும் அரசியல் லாபத்திற்காக சட்டம் சரிவர இயக்கப்படவில்லை என்று மக்கள் நீதி மய்யம் சார்பில் மாதிரி கிராம சபை கூட்டத்தில் கமல்ஹாசன் பேசினார்.அதில் அவர் கூறியதாவது:-

சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில், மாதிரி கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

கிராம சபை கிராமங்களின் பலம். இந்த சட்டம் இயற்றப்பட்டு இதே தேதியில் 25 ஆண்டுகள் முன்னர் இந்த சட்டம் இயற்றப்பட்டது.

இந்த கிராமப்பஞ்சாயத்துகளுக்கு, அந்த கிராம அளவிற்கேற்ப அந்த கிராமத்தின் மக்கள் தொகைக்கேற்ப 1 முதல் 5 கோடி வரை ஒதுக்கப்படும். 12524 கிராமங்கள் தமிழகத்தில் இருக்கின்றன.நம்மில் அதிகமானோர் கிராமத்தில் இருந்து வந்தவர்கள் தான். கிராமத்துடனான நமது தொடர்பு அனைவருக்கும் உண்டு.

அதிகாரத்தில் இருப்பவர்கள் கிராம சபையை செயல்படுத்தியே ஆக வேண்டும் என்பதை நினைவுபடுத்துவதற்காகத்தான் இன்று நாம் இங்கே கூடியிருக்கிறோம்..

இந்த கிராம சபை என்பது ஊற்று போன்றது. அதை நமது கவனமின்மையால் செயல்படுத்த முடியாமல் போயிற்று. இன்று மக்கள் நீதி மய்யம் இதை ஆரம்பித்துவைத்திருக்கின்றது.காவிரி பிரச்சனை போன்று இன்று நாம் சந்தித்துகொண்டிருக்கும் அனைத்து பிரச்சனைக்கும் தீர்வுகளை கிராம சபைகளில் எடுக்க முடியும்.

ஒவ்வொரு வருடமும் கட்டாயம் 4 முறை அதாவது, ஜனவரி 26, மே1,ஆகஸ்ட் 15 மற்றும் அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் கூட்டப்படவேண்டும். அதை நினைவுபடுத்துவதற்காகத்தான் இந்த மாதிரி கிராம சபை.

பஞ்சாயத்துராஜ் சட்டம் சரிவர பயன்படுத்தாமல் இருந்ததற்கு அரசியல் காரணங்கள் இருந்தன. கிராம பஞ்சாயத்துகளுக்கு ஒதுக்கப்படும் நிதி பயன்படுத்தப்படுகிறதா என்பதே எனது கேள்வி .கிராம பஞ்சாயத்துகளுக்கான நிதியை பயன்படுத்தி இருந்தால் தமிழகத்தின் முகம் மாறியிருக்கு என்று கூறினார்.

ஒவ்வொரு மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கும் இந்த கிராம சபைகளை நடத்த வேண்டும் என்பதை நினைவு படுத்துவதற்கு ஒரு கடிதம் மக்கள் நீதி மய்யம் சார்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.நம்மில் அதிகமானோர் கிராமத்தில் இருந்து வந்தவர்கள் தான். கிராமத்துடனான நமது தொடர்பு அனைவருக்கும் உண்டு.ஊழலை ஒரே நாளில் ஒழிக்க முடியாது. முதலில் குறைக்க வேண்டும், அடுத்து தடுக்க வேண்டும், கடைசியாக ஒழிக்க வேண்டும்.நமது கவனமின்மையால் செயல்படுத்த முடியாமல் போன கிராம சபை கூட்டத்தை, மக்கள் நீதி மய்யம் ஆரம்பித்துள்ளது.அவசியம் இருந்தால் உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும். உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.என்னை சிலர் எறும்பு எனக்கூறுகிறார்கள், ஆனால், யானை காதில் எறும்பு புகுந்தால் என்னவாகும், எனவே, வார்த்தை ஜாலங்களில் நுழையாமல் செயல்படுவோம் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

‘எனக்கு மாரடைப்பு வந்திருக்கும்’.. சச்சின், கபில் தேவ் குறித்து அஸ்வின் எக்ஸ் பதிவு!

‘எனக்கு மாரடைப்பு வந்திருக்கும்’.. சச்சின், கபில் தேவ் குறித்து அஸ்வின் எக்ஸ் பதிவு!

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்தது இன்னுமே…

12 minutes ago

ஈரோடு கிழக்கு தொகுதி யாருக்கு? மு.க.ஸ்டாலின் சூசக பதில்!

கோவை : ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் கடந்த 2021இல் நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சியில்…

37 minutes ago

நெல்லை நீதிமன்ற வளாகத்தில் ஒருவர் வெட்டிப்படுகொலை! நேரில் பார்த்தவர் பரபரப்பு பேட்டி!

நெல்லை : இன்று (டிசம்பர் 20) திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் ஒரு கொடூர கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.…

1 hour ago

அமெரிக்க யூடியூப்பருக்கு விருந்து வைத்த தமிழர்கள்… ஆங்கிலத்தில் கலக்கும் தமிழன்… வைரல் வீடியோ.!

சென்னை: அமெரிக்காவை சேர்ந்த யூடியூபர் ஜெய் ஸ்ட்ரேஸி (jay streazy) என்பவர், உலகமுழுவதும் உள்ள பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு…

2 hours ago

கோலி மட்டும் கேப்டன் இருந்தா அஸ்வின் ஓய்வு பெற்றிருக்க மாட்டார்! பாசித் அலி பேச்சு!

சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் திடீரென தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது இன்னுமே…

3 hours ago

ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலா மறைந்தார்!

ஹரியானா: இந்திய தேசிய லோக் தளம் கட்சித் தலைவரும், ஹரியாணா முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சௌதாலா(89) மாரடைப்பால் காலமானார்.…

3 hours ago