அதிமுகவை கதற விட்ட சர்கார்…மன்னிப்பு கேட்க முடியாது….விமர்சனம் செய்வது உரிமை..AR முருகதாஸ் அதிரடி…!!

Default Image

இளையதளபதி விஜய் நடித்து AR.முருகதாஸ் தயாரித்த சர்க்கார் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கின்றது.இந்த படத்தில் தமிழக அரசின் நலத்திட்டங்களை விமர்சனம் செய்ததை போலவும் , ஆளும் அதிமுக அரசை கடுமையான விமர்சனம் வைத்து இருந்தது அதிமுகவினரை கோபத்துக்குள்ளாக்கியது.இதனால் சர்சைக்குரிய காட்சிகளை நீக்க கோரி அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.

இதனால் சர்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு , மறுதணிக்கை செய்து படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.இந்த காட்சியை படத்தில் காட்சிப்படுத்தி நடித்ததற்காக இயக்குனர் AR.முருகதாஸ் மீது வழக்கு பதிவு செய்தது.இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு இயக்குனர் AR.முருகதாஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது இயக்குனர் AR.முருகதாஸ்சுக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று அரசு தரப்பில் வாதாடப்பட்டது.

அதுமட்டுமில்லாமல் அரசின் நலத்திட்டங்களை விமர்சனம் செய்த இயக்குனர் AR.முருகதாஸ் மன்னிப்பு கேட்ட்க வேண்டும் , இனி வரும் படங்களில் அரசின் நலத்திட்டங்களை விமர்சனம் செய்யமாட்டேன் என்று எழுதி தரவேண்டுமென்று அரசு தரப்பு வழக்கறிஞ்சர்கள் வாதாடினார்.அதற்கு AR.முருகதாஸ் தரப்பில்

இனி வரும் காலங்களில் அரசை விமர்சனம் செய்து காட்சி வைக்கக்கூடாது என்பது  கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது , அது என்னுடைய உரிமை என்று கூறி மன்னிப்பு கேட்க முடியாது என்று AR.முருகதாஸ் தரப்பில் திட்டவட்டமாக தெரிவித்தார்.இரண்டு தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள் இந்த வழக்கை டிசம்பர் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.அதுவரை இயக்குனர் AR.முருகதாஸை கைது செய்ய கூடாது என்று நீதிபதி தெரிவித்தார்.

DINASUVADU.COM

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்