அதிமுக விழாவில் 7 லட்சம் பேர் பங்கேற்பு..!!
சென்னை:-
சென்னையில் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவில் 7 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சென்னை மாநகர ஆணையர், செய்தி மக்கள் தொடர்புத்துறை செயலாளர் வெங்கடேசன், சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் மற்றும் காவல்துறை இணை ஆணையர் மகேஷ்வரி மற்றும் சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா வருகிற 30-ந்தேதி சென்னையில் மிக சிறப்பாக நடைபெறவுள்ளது. 7 லட்சம் பேர் கலந்து கொள்ளவுள்ளனர். எழுச்சி விழாவாக தமிழகத்தில் இதுவரை நடைபெறாத விழாவாக இந்த விழா அமையும்.
கருணாஸ் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதற்கான பலனை அனுபவித்துத்தான் ஆக வேண்டும். கருணாஸ் பேச்சு முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. கழக அரசு அமைய காரணம் என கருணாஸ் கூறுவது மிகப்பெரிய காமெடி. எல்லா சட்டமன்ற உறுப்பினர்களும் ஒற்றுமையாக இருந்து தான் ஆட்சியை அமைத்தோம் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், கமல் மக்களை சந்திப்பது பெரிய விஷயம் இல்லை. மக்கள் ஆதரவு யாருக்கு உண்டு என்பது தான். மக்கள் ஆதரவு கழகத்திற்கு உண்டு. இலங்கை போர் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் கண்டன கூட்டம் நடத்துகிறோம். ராஜபக்ஷே வாக்கு மூலத்ைத சும்மா எடுத்துக் கொள்ளக்கூடாது. இதற்கு எதிர்கட்சிகள் ஏன் வாய் திறக்கவில்லை.இன்றைக்கு மவுனம் சாதிப்பது ஏன் என்று கூறினார்
DINASUVADU