உச்சநீதிமன்ற உத்தரவுக்கு இணங்க சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர். இதில் உண்மை வெளிவரட்டும். அதன்பிறகு குற்றம் இருந்தால் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். விசாரணை நடக்கும் போதே ராஜினாமா செய்ய வேண்டும் என்பது தேவை அற்றது. 5 அதிகாரிகளை கைதுசெய்து இருப்பது சிறைக்காவலில் விசாரணை நடத்துவதற்காகத்தான். அவர்கள் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு அழைத்து செல்லப்படவில்லை.
அ.தி.மு.க. அரசை களங்கப்படுத்தவற்காகத்தான் டி.ஜி.பி. ராஜேந்திரன், அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்பட சில இடங்களில் நடந்த சி.பி.ஐ. சோதனை நடத்தப்பட்டு உள்ளது. மு.க.ஸ்டாலின் உள்பட எதிர்க்கட்சியினர் அரசியல் செய்வதற்காக அ.தி.மு.க அரசு மீது தவறான கருத்துக்களை பரப்பி வருகிறார்கள்.மாநில அரசின் நலனுக்காக மத்திய பாரதிய ஜனதா அரசுடன் அ.தி.மு.க. நட்புடன் உள்ளது அதிமுக ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்தவே சி.பி.ஐ. சோதனை நடத்தப்பட்டு உள்ளது என்று தம்பித்துரை நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
DINASUVADU