திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ,ஆளுங்கட்சி தோற்றுவிடும் என்பதாலேயே உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் தள்ளிப்போட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் காமராஜர் புரத்துக்குச் சென்ற அவர் பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.
குடிநீருக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகவும் ஒரு குடம் 6ரூபாய் என்கிற விலைக்குத் தண்ணீரை விலைகொடுத்து வாங்குவதாக அவரிடம் பொதுமக்கள் தெரிவித்தனர். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், அனைத்து ஊழல்களையும் அதிமுகவும் பாஜகவும் இணைந்தே செய்வதாகக் குற்றஞ்சாட்டினார். ஆளுங்கட்சி தோற்றுவிடும் என்பதாலேயே உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் தள்ளிப்போட்டு வருவதாகத் தெரிவித்தார்.
தமிழக மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பணம் பெற்றுக்கொண்டு குட்கா, புகையிலை ஆகியவற்றை விற்க அனுமதித்து மக்கள் நலவாழ்வுக்கு எதிரான அமைச்சராகத் திகழ்வதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு காய்ச்சல் காரணமாக சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில்…
சென்னை : தெற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை…
சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நாகைக்கு தென் கிழக்கே 810 கிமீ தொலைவில்…
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு…
சென்னை : கனமழை எதிரொலியாக தஞ்சை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், காரைக்கால்…
சென்னை : டெல்டா மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ரெட் அலர்ட் காரணமாக இன்று ஒரு சில மாவட்ட பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை…